இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் காவல்கண்காணிப்பாளர் திரு.DR.வருண்குமார், IPS அவர்களின் உத்தரவின் பேரில், இந்தியன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், சிக்கல் காவல்நிலைய காவல் ஆய்வளர் திருமதி.அனிதா மற்றும் காவல் சார்பு ஆய்வளர் திரு.கோட்டைச்சாமி ,காவல்துறை நண்பர்குழு ஒருங்கிணைப்பாளர் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு முனியசாமி மற்றும் காவல்துறை நண்பர்கள்குழு உறுப்பினர் மருதுபாண்டி ஆகியோர் விளக்கி பேசினார்கள்.
சாலை பாதுகாப்பு கருத்தரங்கு சாலைவிதிகள்,சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு, தலைக்கவசம் அணிதல், பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள், மற்றும் அயல் மாநிலத்தவரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், போன்ற பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.
காவலன் செயலி SOS பதிவுயிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை பற்றி விழிப்புணர்வு தந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை திருமதி L.அஜிசியாபானு அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை திரு .முருகசேசன் தலைமை காவலர் சிக்கல் காவல்நிலையம் செய்திருந்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்