விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல்துறையினர் தங்களது காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.