திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவிநாஷ் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில், 01-07-2022 ம் தேதியன்று, பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ( ACTU) திருமதி.ஜெகதா அவர்கள் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளிடம் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாலை பாதுகாப்பு மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும், ATM கார்டு மற்றும் OTP குறித்தும், சமூக வலைத்தளத்தின் முலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது பற்றியும், சமூக வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி பற்றியும், அனைத்து இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 க்கு புகார் தெரிவித்தால் இழந்த பணம் முழுவதும் மீட்கமுடியும் என்பது குறித்தும் மேலும் சைபர் கிரைம் காவல்துறையினரின் https://cybercrime.gov.in/ மேலும் அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி என்ற புதிய செயலி அறிமுகம் 60 க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை Play store ல் இருந்து பதிவிறக்கம் செய்து இந்த செயலி மூலமும் இலவச உதவி எண்:1930 க்கு தொடர்பு கொள்ளலாம் போன்ற விழிப்புணர்வுகளை, பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.