கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி 15.12.2021 இன்று தென்னிலை காவல் நிலைய சரக அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதாஞ்சலி அவர்கள் தலைமையில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. தில்லைக்கரசி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.