திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா R கோம்பையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் செந்தில்(51) ஆசிரியரை திண்டுக்கல் மாவட்ட குழந்தை நல வாரிய அதிகாரிகளிடம் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடப்பதாக மாணவ மாணவியர்கள் தொலைபேசி மூலமாக புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தை நல வாரிய அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை செய்ததில் செந்தில் ஆசிரியர் மாணவ மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில் மாவட்ட குழந்தை நல வாரிய அதிகாரிகள் எரியோடு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற எரியோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள செந்தில் ஆசிரியரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா