சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வித்யா கிரி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவரும் சஞ்சீவ் என்ற மாணவன் மிட்-பிரைன், ஹியூமன் ஸ்கேனர் என்ற திறனறி திறனில் கண்களைக் கட்டிக்கொண்டு, கேரம் போர்டு, செஸ், கார்ட்ஸ் விளையாடுதல் மற்றும் எதிரே அமர்ந்திருப்பவர்களின் சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் தாள்கள் அதன் மதிப்பு அதன் வரிசை எண் ஆகியவற்றை மிட் பிரைன் ஹியூமன்ஸ் ஸ்கேனர் என்ற திறன் மூலமாக கண்டறிந்து சொல்லுதல் போன்ற பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி, உலக சாதனையாளர்கள் புத்தகங்களில் தனது பெயரை பதித்து சாதனைபுரிந்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட அரிமா சங்கத்தின் வேம்பு மண்டலத்தின் சார்பில் மானாமதுரை தனியார் திருமண மண்டபத்தில் அவரது நிகழ்ச்சியும் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 324 பி மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர்கள் சண்முகசுந்தரம், முருகேசன், மாவட்டத் தலைவர் ஆறுமுகம், வட்டாரத் தலைவர் முத்துக்கண்ணன், மண்டலத் தலைவர் முத்துக்குமார், காரைக்குடி சிட்டி அரிமா சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பழனிவேல், பொருளாளர் லெட்சுமணன் உட்பட பல்வேறு அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவரை வாழ்த்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி