ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து, இன்று 17.09.2021ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்ற காவல்துறையினர், பள்ளி மாணவர்களிடையே பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.