கோவை : கோவை மாநகர காவல்ஆணையர் திரு.வே. பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் கஞ்சா, குட்கா, மற்றும் போதை மாத்திரைகள் தொடர்பான குற்றங்களை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில் (17/09/2022),-ம் தேதி மாலை பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேஷ் குமார், அவர்களின் தலைமையில் அவிநாசி ரோடு தொட்டிப்பாளையம் பிரிவு சுரபி நர்சரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஹோண்டா city வாகனத்தை சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சாவுடன் சேர்ந்து காரையும் பறிமுதல் செய்து மேற்படி காரின் ஓட்டுனர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கங்காபிரசாத், என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின், அடிப்படையில் அவர் தங்கியிருந்த நேருநகர், இளங்கோநகர், ஹவுசிங்யூனிட்டில் இருந்த அவர் வீட்டில் இருந்து அவர் கல்லூரி மாணவர்களுக்காக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மேலும் 84 கிலோ கஞ்சாவும் வீட்டில் இருந்த கஞ்சாவை விற்பனை செய்ய பயன்படுத்து இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது இவர் மீது E2 பீளமேடு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.