இராமநாதபுரம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேரில் சென்று மாணவர்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மண்டபம் காவல் ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பாம்பன் பகுதியிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் 03.12.2021-ம் தேதி மாணவர்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அதிகரித்து வரும் ஆன்லைன் குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.