கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட கந்தசாமிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் 52. த/பெ முருகேசன் என்பவரிடம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு, ஆபிரகாம் பிரகாஷ் த/பெ ஆசீர்வாதம் என்பவர் தீபாவளி சீட்டு கட்டி முடித்த நிலையில், தனக்கு தரவேண்டிய ரூபாய் 2,20,000/- பணத்தை தராமல் ஏமாற்றியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்களிடம் புகார் அளித்தார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பரமணியன் அவர்களுக்கு உத்தரவிட்டதின் பேரில், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.தமிழ்வாணன் விசாரணை செய்தார்.
அப்போது பின்னல்வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் ஸ்ரீ லட்சுமி சிறுசேமிப்பு என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி உளுந்தூர்பேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சுமார் 50,00,000/- பணத்தை ஏமாற்றியதுடன் பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்கும் போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்விடுத்துள்ளது தெரியவரவே, தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கபட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.