வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டி.ஆ. மாமல்லவனன், ஐ.கா.ப., அவர்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்டம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றும், அவர்கள் மீது கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சீக்ரெட் அணிகள் மற்றும் சாலை விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், சாலை விதிமுறைகள் முறையாக ஒட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனம் இயக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
















