சிவகங்கை : தேவகோட்டை நகரில் அரசு உத்தரவுப்படி வருகின்ற (12.06.2023), முதல் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனால் நகரில் உள்ள தனியார் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக இயங்கும் மினி வேன், பேருந்து ஆகியவைகளின் ஆவணங்கள் முறையாக உள்ளனவா வாகனத்தின் தகுதிச்சான்று , காப்பீடு, பர்மிட் புகைச் சான்று , ஓட்டுநர் உரிமம் பதுப்பிக்கபட்டு உள்ளதா வாகனங்களில் முதல் உதவி சிகிச்சை பெட்டி, அவசரகால வழி ஆகியவை உள்ளனவா என்பது குறித்து தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் (10.06.2023)ம் தேதி காலை 11.00 மணிக்கு தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் அன்சாரி உசேன், மற்றும் காவலர்கள் தணிக்கை மேற்கொண்டனர். இதில் நகரில் உள்ள தனியார் பள்ளியின் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. பள்ளி வாகனங்களை இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்வதற்கு முறையான அனுமதி இல்லாத வாகனங்கள் மீதும் விதி மீரல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் காவல் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி