திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் பயின்ற பள்ளிக்கு சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்கள் வழங்கியது பழவேற்காட்டில் இயங்கிவரும் ஜ.சு அரசு மேல்நிலைப்பள்ளி எனப்படும் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளியானது பழமை வாய்ந்த பள்ளி ஆகும். 1999-2000 ஆண்டு காலத்தில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகள் நினைவை கொண்டாடும் வகையில் தற்போது பள்ளியில் சங்கமித்தனர்.
பழைய மாணவர்கள் சங்கமமாக நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளி ஆண்டு விழா போல் இதனை கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் இரா.மணி கலந்துகொண்டு சிசிடிவி கேமராவை துவக்கி வைத்தார்.பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.டி.மோகன ஜோதி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்