திருவண்ணாமலை : (29.09.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளியில் பயிலும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவிகள் 9 பேருக்கு கிரெடிட் ஆக்சிஸ் இந்தியா பவுண்டேசன் மற்றும் கிரெடிட் ஆக்சஸ் கிராமின் நிறுவனம் சார்பில் கல்வி மேற்படிப்புக்கு உதவித் தொகையாக தலா 15,000/- ரூபாய் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப. அவர்கள், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்கள், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.K.தயாளன் அவர்கள், கிரெடிட் ஆக்சிஸ் இந்தியா பவுண்டேசன் மற்றும் கிரெடிட் ஆக்சஸ் கிராமின் நிறுவனம் மண்டல மேலாளர் திரு.R.ஆனந்த் அவர்கள் உடனிருந்தனர்.