திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தடகள போட்டிகளில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளை மையப்படுத்தி தொடங்கிய நிகழ்ச்சியில் ஒலிம்பிக் கொடியினையும்,ஜோதியினையும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஏற்றி வைத்தார். பின்னர் தடகள போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் கட்டையை தட்டி துவக்கி வைத்தார். பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் குறுவட்ட செயலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரந்தாமன், ரமேஷ், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் சதீஷ், ரமேஷ், முருகேசன், காங்கிரஸ் மீஞ்சூர் வட்டாரத் தலைவர் கோட்டை ஜெயசீலன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அமிர்தராஜ் வரவேற்க குறுவட்ட இணை செயலரும் பள்ளி உடற்கல்வி ஆசிரியருமான செல்வி நன்றி உரையாற்றினார். இதில் பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு