ஈரோடு : ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் திரு ஜவகர் அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்துக் கொடுத்தார் .மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்றும் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவனும் நமது தேசத்திற்கு எவ்வளவு முக்கிய பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அதே போல் ஒவ்வொரு பெற்றோரும் மாணவர்களை எப்படி கையாள வேண்டும் என்றும் சிறப்பான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கினார். ஆண்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் பள்ளியின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சகோ ஜெ.கோபாலகிருஷ்ணன்