பெரம்பலூர்: பெரம்பலூரில் இருந்து துறையூர் வரை செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றும் பணி நடைப்பெற்று வருவதால் சாலையில் புதிய பாலம் கட்டுவதற்காக மாற்று பாதை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பாதையில் மழையின் காரணமாக ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்ததால் அங்கு ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் காவலர் திரு.சதீஷ் ஆகிய இருவரும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை தற்காலியமாக சரி செய்தனர். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாரின் சமுக சேவையை பாராட்டினார்.