தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அம்மாபேட்டை மற்றும் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களிடம் அறிவாளை காட்டியும் , வெட்டியும் அவரிடமிருந்து பணம் மற்றும் மோதிரம் செயின் ஆகியவற்றை பிடுங்கி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை இனம் கண்டு உடனடியாக கைது செய்ய பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்கள் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துக்குமார் மற்றும் திரு. ராஜேஷ்குமார், தலைமை காவலர் பிரபு காவலர்கள் விஜயகுமார் , பிரபாகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவன் திருச்சி கொண்டையாம் பேட்டை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் நரேஷ் ( 24 ) என்பதும் மேற்படி நரேஷ் என்பவருக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கொலை ,கொள்ளை, கஞ்சா போன்ற பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது என்பதும் தெரிய வந்தது மேலும் அவன் தற்சமயம் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றி வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திருச்சி சென்ற தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளியை நேற்று (18-10-2023) திருச்சியில் வைத்து கைது செய்தார்கள் .
மேலும் அவரிடமிருந்து ஒரு செயின், ஒரு மோதிரம் ,செல்போன், மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்