தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .பூரணி அவர்களுக்கு அய்யம்பேட்டை சரக்கத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை காரில் வைத்து வியாபாரம் செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் படி அந்த நபரை இனம் கண்டு கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.வனிதா மற்றும் அய்யம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முருகதாஸ், ஆகியோர்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் (29-4-2023) அய்யம்பேட்டை புறப்பகுதியில் சந்தேகப்படும் படி வந்த ஒரு இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அகர மாங்குடியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் ஆனந்தராஜன் (29) என்பவர் போலி மது பாட்டில்களை வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது, மேலும் இவர் மீது கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகள் என்று இருபதுக்கும் மேற்பட்ட சாராய வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது அதனை தொடர்ந்து பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான ஆனந்தராஜனை போலீசார் கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள், செல்போன் மற்றும் டாட்டா இன்டிகா கார் ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்