மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்,இ.கா.ப. அவர்கள், உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 3,32,298/- மதிப்புள்ள 30 மொபைல் போன்களும், SP அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.24,33,318/- மதிப்புள்ள 218 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நூதன முறையில் மோசடி செய்த சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.6,48,908/- உரிய நபர்களின் வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வங்கியில் இருந்து பேசுவது போல் மோசடி செய்யும் நபர்களிடம், விழிப்புணர்வோடு இருக்கவும் மதுரை மாவட்ட SP திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தினார்.