மதுரை : மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது . இந்த கடையின் உரிமையாளர் இரவு வழக்கம்போல் கடை அடைத்து விட்டு வீட்டிற்குச் சென்றார்.
இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். டவுன் ,தல்லாகுளம், மற்றும் அனுப்பானடி ஆறு தீயணைப்பு வாகனங்களும் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி குடிநீர் வாகனங்களும் தீயணைப்புத் துறையை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி ரசாயன கலவை கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 அவசர கால ஊர்தி காளவாசல் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டது. மேலும் , பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டனர். சுமார் 2:30 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயானது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய கார் உதிரி பாகங்கள் தீயிலிருந்து நாசமானது. சுமார் மூன்று மணி நேரம் பழங்காநத்தம் தெற்கு தெரு, அக்ரகாரம் ,நேரு நகர், பைகாரா உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள்
இச்சம்பம் குறித்து, எஸ் .எஸ் .காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி