தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் புறப்பகுதியான உத்தாணிகேட் அருகிலுள்ள தமிழன் டிரேடர்ஸ் என்ற இரும்பு கடையில் இருந்து சுமார் பல லட்சம் மதிப்புள்ள வீடு கட்டும் புதிய இரும்பு கம்பிகள் கடந்த வருடம் திருட்டுப் போனதாக புகார் வந்ததை தொடர்ந்து பாபாநாசம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தார்கள் . இந்நிலையில் பாபநாசம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். அலுவலகத்திற்கு மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தற்போது பாபநாசம் சுற்றுப் பகுதிகளில் சுற்றி திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை இனம் கண்டு கைது செய்ய பாபநாசம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்கள், உத்தரவின் பேரில் காவல் துறை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துக்குமார் , திரு. ராஜேஷ்குமார் மற்றும் தலைமை காவலர் திரு. பிரபு மற்றும் காவலர்கள் விஜயகுமார், பிரபாகர் , சந்தோஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சி.சி.டிவி கேமராக்கள் மற்றும் தொலைபேசி எண்களை ஆராய்ந்தும் தீவிர விசாரணை மேற்கொண்டன.
மேற்படி இரும்பு கம்பியை ஈச்சர் (லாரி) வண்டி மூலம் திருடியது. அய்யம்பேட்டை அருகிலுள்ள திருச்சோற்றுத்துறை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் மணிகண்டன் (41). என்பதும், இவர் மீது பல்வேறு கொலை முயற்சி , கொள்ளை மற்றும் திருட்டு , லாரி திருடுவது போன்ற பல குற்ற வழக்குகள்ஈரோடு ,லால்குடி, திருச்சி ,தஞ்சாவூர், திருவையாறு மற்றும் அய்யம்பேட்டை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. மேற்படி வீடு கட்டும் புதிய இரும்புக் கம்பி திருட்டில் ஈடுபட்ட மணிகண்டன் உடன் அவனது நண்பர்களான திருச்சோற்றுத்துறை பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பிரபாகரன் (எ) காட்டேரி (33). மற்றும் திருவையாறு அருகிலுள்ள காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் ராஜமணிகண்டபூபதி (24). கள்ளர் பசு பதிகோவில் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் மணிகண்டன் (28). மற்றும் திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்வேலி பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் ஜெபி (38). ஆகிய நான்கு நபர்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்படி குற்றவாளிகளை தனிப்படை போலீசார் இன்று (27-9-2023) திருச்சோற்றுத்துறை மற்றும் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி கள்ள பசுபதிக்கோயில், அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் தீவிர தேடுதலின் பேரில் ஐந்து நபர்களையும் சுற்றி வளைத்து கைது செய்து அவர்களிடம் இருந்து லாரி ஒன்று மற்றும் சுமார் ஐந்து டன் எடையுள்ள வீடு கட்ட பயன் படும் புதிய இரும்பு கம்பிகளை கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்