சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை தாலுகா , முப்பையூர் ஊராட்சி,மேக்காரைகுடியை சேர்ந்த சேது மகன் அஜித் என்பவர் மீது தேவகோட்டை, காளையார்கோவில்,R.S. மங்கலதை சார்ந்த காவல்நிலையத்தில் பல குற்றவழக்குகளில் இரண்டு வருடமாக தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று இரவு(7/10/2023) மேக்காரைகுடி கிராமத்தில் காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதிப்பிற்குரிய சார்வு ஆய்வாளர் பொன்.பார்த்திபன் அவர்கள். அஜித்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி