காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான காதர் ( எ ) ஷேக் காதர் ( 36 ), காஞ்சிபுரம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க (12.09.2022), உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்