கோவை : (04/08/22), தேதி கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V.பாலகிருஷ்ணன்,
இ.கா.ப., அவர்கள் B4 உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான வின்சென்ட் ரோடு,கோட்டைமேடு, பூம்புகார் சாலை, பெரிய பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் Foot patrol சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்,வாகன ஓட்டிகளிடம் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார், பொதுமக்கள் மழை காலங்களில் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுரை வழங்கினார். மேலும் உக்கடம் காவல் நிலையம் சென்று அங்கு புகார் அளிக்க வந்த பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்