சென்னை : சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்ட எஸ் ஆர் எம் சி சரகத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்களின் மற்றும் சென்னை கூடுதல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் அறிவுரையின்படி, அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு. மகேஷ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில், எஸ் ஆர் எம் சி உதவி ஆணையாளர் எம்.பழனி அவர்களின் தலைமையில், குன்றத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு.சந்துரு, மாங்காடு சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.தியாகராஜன் அவர்கள் மற்றும் மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. லதா மகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்நதனர்.
மதனபுரம் குன்றத்தூர் ரோடு சந்திப்பு அருகே நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த சூர்யா மற்றும் பட்டாபிராம் சார்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களை விசாரணை செய்ததில், மாங்காடு காவல் நிலைய எல்லைக்குள் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளில், பூட்டை உடைத்து திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் விசாரணை செய்த போது, மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 7 இடத்திலும், குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு இடத்திலும், அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூன்று இடத்திலும், அயனாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூன்று இடத்திலும் குற்றங்கள் புரிந்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இதன்படி குற்றவாளிகளை நேற்று மதனந்தபுரம் குன்றத்தூர் ரோடு சாலை சந்திப்பில் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 35 சவரன் தங்க நகை, 2 கிலோ 50 கிராம் வெள்ளி பொருட்கள், இரண்டு லேப்டாப், இரண்டு கேமரா, இரண்டு டேப், ஒரு செல்போன் மற்றும் இரண்டு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 15 ஜூலை 15 லட்சம் ஆகும் மேற்படி குற்றவாளிகளை கைது செய்து களவு போன பொருளை மீட்க தனிப்படை காவல்துறையினர் உயர் அதிகாரிகள் பாராட்டினர்
பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்ட எஸ் ஆர் எம் சி சரகத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்களின் மற்றும் சென்னை கூடுதல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் அறிவுரையின்படி, அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு. மகேஷ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில், எஸ் ஆர் எம் சி உதவி ஆணையாளர் எம்.பழனி அவர்களின் தலைமையில், குன்றத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு.சந்துரு, மாங்காடு சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.தியாகராஜன் அவர்கள் மற்றும் மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. லதா மகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்நதனர்.
மதனபுரம் குன்றத்தூர் ரோடு சந்திப்பு அருகே நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த சூர்யா மற்றும் பட்டாபிராம் சார்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களை விசாரணை செய்ததில், மாங்காடு காவல் நிலைய எல்லைக்குள் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளில், பூட்டை உடைத்து திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் விசாரணை செய்த போது, மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 7 இடத்திலும், குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு இடத்திலும், அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூன்று இடத்திலும், அயனாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூன்று இடத்திலும் குற்றங்கள் புரிந்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இதன்படி குற்றவாளிகளை நேற்று மதனந்தபுரம் குன்றத்தூர் ரோடு சாலை சந்திப்பில் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 35 சவரன் தங்க நகை, 2 கிலோ 50 கிராம் வெள்ளி பொருட்கள், இரண்டு லேப்டாப், இரண்டு கேமரா, இரண்டு டேப், ஒரு செல்போன் மற்றும் இரண்டு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 15 ஜூலை 15 லட்சம் ஆகும் மேற்படி குற்றவாளிகளை கைது செய்து களவு போன பொருளை மீட்க தனிப்படை காவல்துறையினர் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா