காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள
அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான 1 ) முருகன் ( எ ) பூணை முருகன் 33, எண்.1, யதோத்தகாரி மாடவீதி, பொய்யாகுளம், காஞ்சிபுரம் மற்றும் 2) ஏகா எ ஏகாம்பரம் 40
மணிமங்கலம் ஆகியோர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை விஷ்ணுகாஞ்சி மற்றும் மணிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.