காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . அவரது தாய் தந்தையருக்கு சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு விவரத்தினை பார்ப்பதற்காக பட்டாவை பெற்று சென்றுள்ளார், சுங்குவார்சத்திர காவல் நிலைய பிரபல சரித்திர பதிவேடு ரவுடி குணா ( எ ) படப்பை குணா மதுரமங்கலம் என்பவரிடம் பிரபாவதியின் தந்தை கமார் 1.5 வருடத்திற்கு முன்பு ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
ரவுடி குணா ( எ ) படப்பை குணா தற்போது மேற்படி நிலத்தின ஆவணத்தை கேட்டு மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் பிரபாவதி நிலத்தின் பட்டாவை பெற்று சென்றதால் குணா ( எ ) படப்பை குணா தனது அடியாட்களை விட்டு பிரபாவதியை மிரட்டியுள்ளார். இதுசம்பந்தமாக பிரபாவதி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் ரவுடி குணா ( எ ) படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி குணா ( எ ) படப்பை குணாவை சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார் குற்றவாளி குணா ( எ ) படப்பை குணா காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி மொத்தம் 24 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் ஆவார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் மீது தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், எவரேனும் பொதுமக்களுக்கும், அவர்களது சொத்துக்கும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.