காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..Dr.M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா
மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 1) புருஷோத்தமன் 28 கீழாண்டைத் தெரு, கோவிந்தவாடி அகரம், 2) சுதாகர் 25 கழாண்டைத் தெரு, கோவிந்தவாடி அகரம், 3) தட்சிணாமூர்த்தி 29, பெருமாள் கோயில் தெரு, கோவிந்தவாடி அகரம் மற்றும் 4) மதிவாணன் 24 எண், 491, பிள்ளையார் கோயில் தெரு, ஊவேரிச்சத்திரம் ஆகியோர்கள்
தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் மேற்படி 4 நபரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr.M. சுதாகர் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் எவராயினும் சட்டத்தின் வாயிலாக இரும்புகரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.