தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அகரம் தெற்கு தெருவை சேர்ந்த பண்டாரம் மகன் பலவேசம் (44), என்பவருக்கும், முறப்பநாடு அகரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரெங்கராஜன் (32), என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த (06.11.2022), அன்று இரவு ரெங்கராஜன் மற்றும் அவருடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து பலவேசத்தின் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த டிவி, பேன் ஆகியவற்றை உடைத்தும் வீட்டிலிருந்த இருசக்கர வாகனத்தை எரித்தும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து பலவேசம் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அந்தோணிராஜ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி ரெங்கராஜனை கைது செய்தார். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி ரெங்கராஜன் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மோசடி வழக்கு உட்பட 2 வழக்குகளும், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.