பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 1. தலைமைக் காவலர் 1300 திரு.குமார் என்பவர் Mangalamedu PS Cr.No.951/21 U/s 147, 323, 427, 393 IPC என்ற வழக்கின் A1 எதிரியை நீண்ட காலமாக பிடிக்கபடாமல் இருந்தவரை தனி ஒருவராக சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காகவும்
2. தலைமைக் காவலர் 1366 திரு.சந்திரபிரகாஷ் என்பவர் பெரம்பலூர் காவல் நிலைய சிறுவாச்சூர் பெரியசாமி கோவில் சிலையை உடைத்த குற்றவாளி நாதனை மலை பகுதியில் சென்று பிடித்ததற்க்காகவும்
3. தலைமைக் காவலர் 1695 திரு.பாலமுருகன் என்பவர் Kunnam PS Cr.No.819/21 & 827/21, Maruvathur PS Cr.No.550/21 ஆகிய செயின் பறிப்பு வழக்குகளில் குறுகிய காலத்தில் Tower dump Analysed செய்து கொடுத்தமைக்காகவும்
4. முதல்நிலைக் காவலர்-1387 திரு.ஆறுமுகம் என்பவர் கடலூர் மாவட்டம் வேப்பூரில் நகை பறித்து சென்ற திருடன் 1.அருன்ராஜ் த/பெ சம்பத், 2.நவஸ் முகமது , 3.வினோத் ஆகியோர்களை அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பந்தட்டையில் பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காகவும்
மேற்படி குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய திறம்பட செயல்பட்ட நான்கு நபர்களை திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து வெகுமதிகளை வழங்கினார்.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களிடம் வெகுமதி பெற்ற பெரம்பலூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த மேற்படி 4 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.