காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷணுக்காஞ்சி மற்றும் பெருநகர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1 ) பாலாஜி ( எ ) ஆன்ஸ் பாலாஜி 34 . 2 ) தேவராஜ் 34. 3 ) அந்தோனி 24. 4 ) அதியமான் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி விஷ்ணுக்காஞ்சி காவல் ஆய்வாளர் மற்றும் பெறுநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், பெருநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான1 ) ஜாக் ( எ ) ஜாக்ஸன் 28.மற்றும்
2 ) புஷ்பராஜ் 26 ஆகியோர்கள் மீது பிரிவு 109 கு.வி.மு.ச – ன்படி பெருநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டசரித்திர பதிவேடு ரவுடி சேகர்
40 என்பவர் மீதுபிரிவு 107 கு.வி.மு.ச – ன்படி ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்