சேலம் : சேலம் மாவட்டம் கருமலை கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (29/8/2022), -ம் தேதி பொக்கிஷ் (17) என்ற சிறுவனை கொலை செய்து மேட்டூர் கண் பாலத்தில் செல்லும் உபரிநீரில் வீசியும் பல கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகள் சதீஷ் (23) இந்திரா நகர் புதுச்சாம்பள்ளி கருமலை கூடல் தெப்பக்குள கார்த்திக் என்கின்ற கார்த்திக் (23) தெப்பக்குள வீதி கருமலை கூடல் ஆகியோர்களை காவல் ஆய்வாளர் மேட்டூர் பொறுப்பு கருமலை கூடல் அவர்களால் கைது செய்யப்பட்டு ஆத்தூர் சிறையில் இருந்தவர்கள் மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபினவ் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததன் பேரில் (28/11/2022), -ம் தேதி மாவட்ட ஆட்சியர் திரு.கார்மேகம் அவர்கள் குற்றவாளிகளை குன்று தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மேலும் மேற்படி குற்றவாளிகள் மீது சேலம் மாவட்டம், கருமை கூடல், ஜலகண்டாபுரம், ஈரோடு மாவட்டம், பவானி, சித்தோடு மற்றும் நம்பியூர், ஆகிய காவல் நிலையங்களில் கொலை கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்