விழுப்புரம் : விழுப்புரம் புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் நரேஷ் (25), இவர் மீது விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த (28.9.2022) அன்று பட்டானூர் திருநகர் பகுதியில் கோபாலகிருஷ்ணனின் மகன் அன்பழகன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக நரேசை ஆரோவில் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ஸ்ரீநாதா, பரிந்துரை செய்தார். அதன்பேரில் நரேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.