இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சரஸ்வதி நகரில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திருமதி.சுதந்திரதேவி அவர்கள் U/s 379 IPC r/w 21(1)Mines and Minerals Development Regulation Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
தேர்தல் முன்விரோதம் வீட்டை சேதப்படுத்தி உரிமையாளரை தாக்கியவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் பகுதியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அருணாச்சலம் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டையும், வாகனத்தையும் சேதப்படுத்திய முத்துராமலிங்க சேதுபதி என்பவரை ஆய்வாளர் திருமதி.ராணி அவர்கள் U/s 120(B),147, 148,294(b),506(ii) IPC r/w 3 of TNPPDL act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய ராஜேஷ் என்பவரை SI திரு.கந்தசாமி அவர்கள் U/S 21(4) Mines And Minerals Development act 1957-ன் கீழ் கைது செய்தார்.
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இராமு என்பவரை SI திரு.முருகானந்தம் அவர்கள் U/s 5 of 7 (3) TN Lottery and regulation Act-ன் கீழ் கைது செய்தார்.
சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியில் சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிய பாஸ்கரன் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரையும் SI திரு.கோட்டை சாமி அவர்கள் U/s 379 IPC r/w 21(i) Mines & Mineral Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும், மணல் அள்ள பயன்படுத்திய JCB ,லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்