சேலம் : கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் கேட் அருகே இயங்கி வரும் JG HOSIERY PRIVATE LIMITED நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விசாகா கமிட்டி, பெண்கள் பாதுகாப்பு , சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் கெங்கவல்லி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.இரா.சிவக்குமார், அவர்களின் கனவுத் திட்டமான “நல்லிணக்கம் நாடி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். விழிப்புணர்வின் போது , போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சாலைப்பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அரசால் வழங்கப்படும் அவசரகால உதவி எண்கள் குறித்து எடுத்துரைத்து, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்