திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு:பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் கடலாடி காவல் ஆய்வாளர் திருமதி.மங்கையர்கரசி தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு.சந்திரசேகர்,திரு.விமல் குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை திருட்டு கும்பலை சேர்ந்தவர்களை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடலாடி அடுத்த காஞ்சி கிராம பேருந்துநிலையத்தில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர்.
போளூரை அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகன் ராமஜெயம் (வயது 34, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமாரின் மகன் ரமேஷ் 23, கருப்பசாமியின் மகன் பேச்சிமுத்து 22 vஆகிய 3
பேரும்,இவர்கள் கொடுத்த தகவலின் படி கூட்டாளிகளான ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த தர்மரின் மகன் இந்திரகார்த்திக் 26, பரமசிவத்தின் மகன் ஏகலைவன் 28, அர்ஜுனனின் மகன் முத்துக்குமார் 23 ஆகியோரையம் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்த 66½ பவுன் நகைகள், கார், மோட்டார்சைக்கிள், 4 பட்டா கத்திகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.