திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மத்திய பல்கலைகழகத்திற்கு வரும் – (30.11.2024) அன்று மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் அவர்கள் வருகையை முன்னிட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் (22.11.2024), பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் உடனிருந்தார்கள். மேலும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவு மற்றும் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் பிரிவில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள்.