கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசுக்கு சொந்தமான மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை இரவு நேரங்களில் திருடிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ்., அவர்கள் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை விரைவாக கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் திரு.பாபு அவர்களின் தலைமையில் திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவசந்திரன், திருக்கோவிலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன், தலைமை காவலர் திரு.பிரகாஷ், மு.நி.கா திரு.சிவஜோதி, திரு.வீரப்பன், திரு.பாஸ்கரன், திரு.மணிமாறன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவலர் திரு.சிவராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தொழில்நுட்ப உதவியுடன் தேடிவந்தனர்.
இந்நிலையில் 06.02.2023-ந் தேதி தனிப்படையினர் தீவிர விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி ஜோதி நகரைச் சேர்ந்த 1) இப்ராகிம் 35. த/பெ தாஜூதீன், 2) ஜாபர் 35. த/பெ ஜான் பாஷா, சந்தைமேடு, தியாகதுருகம், 3)அன்பு(19) த/பெ குமார் வடதொரசலூர், 4) விக்கி@ விக்னேஷ் 20. த/பெ குமார், வடதொரசலூர், 5) சவுகத் அலி 27. த/பெ சபீர்முகமது, திருவள்ளுவர் நகர், தியாகதுருகம், 6) ஆனந்த் 40. த/பெ சேஷய்யா, ராஜாம்பாள் நகர், கள்ளக்குறிச்சி, 7) முனிராஜா 39 த/பெ பிச்சைக்கனி, அகரத்தான்கொல்லை, கள்ளக்குறிச்சி ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், தச்சூர் மின் பொறியாளர் அலுவலகத்தில் LINE INSPECTOR– ஆக பணி புரிந்து வரும் இப்ராஹிம் என்பவர் மின் அலுவலகத்தில் பழுதடைந்து கிடந்த TRANSFORMER-ஐ திருடி சென்று ஜாபர் என்பவருக்கு சொந்தமான இரும்பு கடையில் விற்றுள்ளார்.
மேற்படி அன்பு, விக்கி@ விக்னேஷ் மற்றும் தலைமறைவாகயுள்ள வடதொரசலூரை சேர்ந்த 8) விக்னேஷ் 20. த/பெ செல்வம் ஆகிய மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளகச்சேரி, தானம், கீழதாழனூர், பழங்கூர், அலியபாத், காட்டு செல்லூர், கா.பாளையம், செங்குறிச்சி, எ.குமாரமங்களம், ஒலையனூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள சுமார் 22 TRANSFORMER- ஐ கழற்றி அதிலிருக்கும் சுமார் 1000 லிட்டர் ஆயில் மற்றும் சுமார் 2500 கிலோ காப்பர் கம்பிகளை திருடி தியாகதுருகம் சௌகத் அலி என்பரது TN 32K 0451 பதிவெண்கொண்ட ஆட்டோவில் எடுத்துச் சென்று தியாகதுருகம் ஜாபர் கள்ளக்குறிச்சி ஆனந்தன் மற்றும் முனிராஜா ஆகியோரிடம் விற்றுவுள்ளார்கள். அவர்கள் அதை வாங்கி சென்னையில் உள்ள இளையபெருமாள் (எ) பெருமாள், லட்சுமி மெட்டல்ஸ், 5-வது தெரு, JJ நகர், Industrial Estate, முகப்பேரு கிழக்கு, சென்னை-37 என்பவரிடம் விற்றுள்ளனர்.
மேற்படி குற்றவாளிகளை 7 பேர் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 140 கிலோ காப்பர் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, மகேந்திரா போலிரோ பிக்அப் மற்றும் அசோக் லேலன்ட் தோஸ்து ஆகிய வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஒரு குற்றவாளியை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர், குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றிகளை உடைத்து காப்பர் கம்பிகளை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படையினருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.