அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படி, மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.விஜய ராகவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள்- 50 வாகனங்களை மார்ச் 21 காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், ஏலம் விடப்படும் அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூபாய் 1000/- செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம், அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜி எஸ் டி தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரமாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும், வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது.
பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை ஏலம் நடைபெறும் தேதி அன்று காலை 08 மணி முதல் பார்வையிடலாம். ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகலாம்.