திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் இன்று 08.03.2022-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 99 இரண்டு சக்கர வாகனங்களும், 01 மூன்று சக்கர வாகனம் மற்றும் 06 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 106 வாகனங்கள் 15,65,400/– ரூபாய்க்கு ஏலம் போனது. இதற்கு சரக்கு மற்றும் சேவை வரியாக (GST) 2,81,772/- ரூபாய் உட்பட மொத்தம் 18,47,172/- ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்