கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.சக்தி கணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாக்கியராஜ் மற்றும் போலீசார் சி. கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடம் வடகிழக்கு பருவ மழையினால் கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிறைந்து உள்ளது.
நீர்நிலைகள் நிறைந்துள்ள ஆறு மற்றும் குளங்களில் குளித்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது .இதை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்கள் குளிக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் தங்கள் கிராம மக்களிடம் தற்போது ஓடும் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.