சிவகங்கை: காரைக்குடி கோட்டையூர் முத்துக்குமார் (47). இவர் ராணுவ மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து ஓய்வு பெற்றார். தற்போது தனியார் கிளினிக்கில் பணியில் உள்ளார். இவரது அலைபேசிக்கு டில்லி, லண்டனில் இருந்து பேசியவர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்துள்ளதாக கூறினர். இதனை பெற சுங்கவரி கட்ட வேண்டும் என ஆசை வார்த்தை கூறியதால் அலைபேசியில் அழைத்தவர்களின் வங்கி கணக்கிற்கு மார்ச் 6 முதல் 9ம் தேதிக்குள் பல தவணையாக ரூ.7.55 லட்சம் வரை செலுத்தினார். பரிசு பொருள் வரவில்லை. விசாரணையில் ஏமாற்றியது தெரிந்தது. இது குறித்து முத்துக்குமார் சிவகங்கை மாவட்டம் காவல் கண்களிப்பாளர் செல்வராஜிடம் புகார் அளித்தார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி விசாரிக்கிறார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி