சேலம் : சேலம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஏற்காடு கோடை விழாவில் (27/5/2023) ஆம் தேதி செல்லப்பிராணிகள் கண்காட்சியில் சேலம் மாவட்ட காவல்துறையின் குற்றவாளிகளை மோப்பம் கிடைக்கும் மற்றும் வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் வளர்ப்பு நாய்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்ச்சிகள் நடத்தின இதில் வளர்ப்பவர்களின் சொல்லுக்கு கீழ்ப்படியும் செல்ல பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் காவல் துறை சேர்ந்த வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் ஓபன் நாய்களான லேபர் நாய் தரணி மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஜெனி, ஆகியவை முதல் பரிசையும் குற்றவாளிகளின் நோக்கம் பிடிக்கும் நாய்களான ஜெர்மன், ஷெப்பர்ட் நாய் நேகா, மற்றும் டாபர் மேன், நாய் லில்லி, ஆகியவை இரண்டாம் பரிசையும் வென்றனர். மேலும் மோப்பநாய் பிரிவை சேர்ந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல், தலைமை காவலர்கள் திரு.தைலம்பச்சை, திரு.கந்தசாமி மற்றும் முதல்நிலை காவலர் திருவாளர்கள் கலையரசன், செந்தில்குமார், வெங்கடாசலம், அழகேசன், ரஞ்சித் குமார், மற்றும் சதீஷ், ஆகியோர்கள் (29/5/2023) ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களை பரிசுகள் வென்ற மோப்ப நாய்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்