திருச்சி : திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆகும் என்பதால், மேற்படி காவேரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை (10.09.2022) இரவு 12 முதல் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக(11.09.22), ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள காவேரி பாலத்தையும் பார்வையிட்டும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாவண்ணம் திட்டமிடப்பட்ட மாற்றுப்பாதைகளை நேரில் பார்வையிட்டுட்டார்கள். எனவே, காவேரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் மாற்றுப்பாதைகளில் தங்களது பயணத்தை பாதுகாப்பாக மேற்கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.