திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீதி பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து தங்க நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்து, அவர் திருடிச்சென்ற 12 சவரன் தங்கநகைகளை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், திருட்டு, கஞ்சா, குட்கா, மது விற்பனை, கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.















