கடலூர்: சிலநாட்களுக்குமுன் பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பி முட்லூர் பகுதியில் 30 வயதுள்ள மனநலம் பாதித்த பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார் , அப்பெண்ணுக்கு புது ஆடை வாங்கிக்கொடுத்து அணிவித்து கடலூரில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர் பரங்கிப்பேட்டை போலீசார் மனிதநேயத்துடன்
இன்று பரங்கிப்பேட்டை ஆய்வாளர் திருமதி.தேவி அவர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் சென்றவர்கள் விபத்துள்ளுக்குள்ளானதை கண்டு உடனடியாக தனது போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளார்.
ஆம்புலன்சிற்கு போன் செய்துவிட்டு காத்திருக்காமல் உரியநேரத்தில் விபத்தில் சிக்கியவர்களை தாமதமின்றி மருத்துவமனைக்கு கொண்டுசென்று காப்பாற்றிய பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் திருமதி.தேவி உள்ளிட்ட போலீசாரின் மனிதநேய செயலை பரங்கிப்பேட்டை மக்கள் பாராட்டிவருகின்றனர்
இதை ஓர் பெரிய விஷயமாக சொல்வதற்கு காரணம் காவல்துறையை பலமுறை மக்களாகிய நாம் விமர்சித்துள்ளோம் , தவறாக பேசியுள்ளோம் , அதே காவல்துறை நல்லவிஷயங்களை செய்யும்போது அதையும் நாம் பாராட்டுவதே நியாயமானது , நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்தினால் நல்லவைகள் தொடரும் இறைவன் அருளால் .
பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் திருமதி.தேவி அவர்களுக்கும் உதவி ஆய்வாளர்களுக்கும் , காவலர்களுக்கும் , காவல் ஓட்டுனருக்கும் மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்
இதுபோன்ற நற்செயல்களில் ஈடுபடும் போலீசாரை தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் பாராட்டி ஊக்கப்படுத்தி வருவது போலீசாருக்கு மேலும் உதவும் எண்ணத்தை கொடுக்கின்றது .