சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. த. செந்தில்குமார், கலந்து கொண்டார் .பயிற்சி மையத்தினை திறந்து வைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு தேவை ஆவணங்கள் அல்ல அதிகாரம் மட்டுமே சாதனை என்பது ஒரு இனத்திற்கும், வகுப்பிற்கோ சொந்தமானது அல்ல நாம் நினைத்தால் சாதனை படைக்க முடியும் நாம் செய்யத் தவறிய உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் யாராவது ஒருவர் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
அரசு பணி என்பது சுயமரியாதை காண அடையாளமாகும். பெண் அடிமையை நீக்க ஒரே வழி போட்டி தேர்வுகள் மட்டுமே. பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தங்களது தலைமுறை வாழ வைக்கவும் வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கஷ்டப்பட வேண்டும். விதை வீரியமாக இருந்தால் விண்ணில் கூட முளைக்கும். வேறு எந்த ஒரு மாவட்டத்திலும் செய்யாததை நம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்துள்ளார். அவருடைய இந்த முயற்சியினை நாம் அனைவரும் பாராட்டவேண்டியது என்று கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்