தஞ்சாவூர் : தஞ்சாவூர் , கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள அய்யம்பேட்டை அருகிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் முதல்வர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்களுடைய கல்லூரியில் மெக்கானிக்கல் லேபில் உள்ள டிரில்லர் மெஷின், நீர்மூழ்கி மோட்டார், மற்றும் டெமாலிசன் மிசின், ஆகியவைகள் காணாமல் போனதாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தந்ததின் அடிப்படையில் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.வனிதா மற்றும் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் மற்றும் அய்யம்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முருகதாஸ், ஆகியோர்கள் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு அங்கு உள்ள CCTV கேமராவில் ஆய்வு செய்ததில் கல்லூரியில் உள்ள கல்லூரி பேருந்து ஓட்டுநரான திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ராஜா என்பவர் சுமார் 15 ஆண்டுகளாக அந்த கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் இக்கல்லூரி மெக்கானிக்கல் லேபில் உள்ள உபகரணங்களை திருடி சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் மேற்படி நபரை கைது செய்து அவரிடம் இருந்த களவாளப்பட்ட பொருட்களை கைப்பற்றி தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்