மனதார விரும்பி கேட்டுப் பெற்ற பதவி இடமாற்றத்தை இன்னும் ஒரு சிலர் துக்கம் விசாரிப்பதை பார்த்தால் எவ்வளவு கீழ்த்தரமான மனநிலையுடைய சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று தெரிகிறது. பெரும்பான்மையான மக்கள் பார்வையில் அதிகாரம் மிக்க, விளம்பரம் தரும் பதவிகள் தான் முக்கிய பதவிகளாக கருதப்படுகின்றன.
எந்த ஒரு துறையிலும் பயிற்சி என்பது ஒரு முக்கிய அங்கம். சரியான பயிற்சி இல்லையென்றால் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறிவிடும். அதிகாரம் என்பது ஒரு ஆடம்பர அழகு கிடையாது. அந்த அதிகாரத்தைக் கொண்டு எப்படிப்பட்ட நல்ல சமுதாய மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம் என்பதே. திறமையான களப்பணியாளர்களை உருவாக்குவது ஒரு சவாலான பணி மட்டும் அல்ல மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பணியும் கூட. 25 வருட அனுபவங்களைக் மேற்கொண்டு சிறந்த அதிகாரிகளை உருவாக்க முயற்சி செய்வது சரியான காலத்தில் கிடைத்த ஒரு பாக்கியம்.